Wednesday, 26 August 2020

கதையை வாசிங்க... கருத்தை யோசிங்க... (3)

பாகற்காயும் பிடிக்கும் 



வினோபா பாவே என்பவர் காந்தியின் சீடராக சபர்மதி ஆசிரமத்தில் இருந்தபோது நடந்த நிகழ்வு இது. ஒரு முறை சாப்பிடும் வேளையில் உணவறையில் எல்லோரும் அமர்ந்திருந்தபோது பாகற்காய் கூட்டு எடுத்து எல்லோருக்கும் பரிமாறுகிறார் காந்தி. வினோபாவுக்கு பாகற்காய் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் காந்தியை ரொம்ப பிடிக்கும். 

எனவே பாகற்காய் கூட்டை வைத்துவிட்டு காந்தி நகர்ந்து போவதற்குள் கணப்பொழுது யோசித்தார் வினோபா. சட்டென்று அப்படியே அள்ளி வாயில்போட்டு விழுங்கிவிட்டார். அதைப் பார்த்த காந்தி, ‘உனக்கு பாகற்காய் ரொம்ப பிடிக்குமோ’ என்று கேட்டபடியே மீண்டும் வினோபாவின் தட்டில் பாகற்காயை வைத்தார். 

அப்போது வினோபாவின் மனதில் ஒரு சிந்தனை உதித்தது: “விரும்புவதை விட்டுவிடுவது மட்டுமல்ல விரும்பாததையும், பிடிக்காததையும் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வதும் கூட துறவறமே.”