கடவுள் இருக்கிறார்
உடனே விஞ்ஞானி அந்த பயணியைக் கூப்பிட்டு, ‘நீ என்ன வாசித்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்க அவரோ, ‘விவிலியத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று பதில் சொன்னார்.
அதைக் கேட்ட அந்த விஞ்ஞானிக்கு கோபம் தலைக்கேறியது. ‘நாம் வாழ்வது அறிவியல் யுகத்தில் என்பது தெரியாதா? இன்னும் கடவுள் நம்பிக்கை என்று எதற்கு முட்டாள் தனமாக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறாய்?’ என்று பொரிந்து தள்ளினார்.
அந்த உடன் பயணி பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார். மீண்டும் விஞ்ஞானி ‘உனக்கு நேரம் கிடைக்கும் போது என்னை வந்து பார். வாழ்க்கையை எப்படி அறிவியல் பூர்வமாக அணுகுவது என்று உனக்குக் கற்றுக் கொடுக்கிறேன்’ என்று சொல்லி தன்னுடைய முகவரி அட்டையை அந்த மனிதருடைய கைகளில் திணித்தார்.
சற்று நேரம் கழித்து அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது. இரயிலிலிருந்து இருவரும் இறங்கினார்கள். அப்போது விஞ்ஞானி அந்த சக பயணியைப் பார்த்து ‘உன்னுடைய பெயர் என்ன?’ எனக் கேட்டார். அவரோ ‘தாமஸ் ஆல்வா எடிசன்’ என்றார்.
அதிர்ச்சியும் வியப்பும் மேலிட்டவராய், ‘ஐயா, மன்னித்துக் கொள்ளுங்கள். நான் உங்களை தனியாக வந்து சந்திக்க வேண்டும். எனக்கு நேரம் தாருங்கள்’ என்று கேட்டு அவருடைய ஆய்வகத்திற்கு வருவதற்கு அனுமதியைப் பெற்றுக் கொண்டார்.
அடுத்த நாள் காலை தாமஸ் ஆல்வா எடிசனின் அறிவியல் ஆய்வத்தில் நுழைந்த அந்த இளம் விஞ்ஞானி அங்கே தயாரித்து வைக்கப்பட்டிருந்த அண்டவெளியின் நுண் மாதிரியைப் பார்த்து ஆச்சரியப்பட்டவராக, ‘ஐயா இதை யார் செய்தார்கள்?’ என்று வினவினார்.
எடிசன் புன்முறுவலோடு, ‘யாரும் செய்யவில்லை. நேற்று இரவில் இந்த இடத்தில் எதுவுமில்லை. இன்று காலையில் வந்து பார்த்தால் இது இருக்கிறது. ஒருவேளை அதுவாகவே வந்திருக்கும்’ என்று சொன்னார். இதைக் கேட்ட அந்த இளம் விஞ்ஞானி சிரித்துவிட்டு, ‘ஐயா, விளையாடாதீர்கள், சொல்லுங்கள்’ என்றார்.
மீண்டுமாக எடிசன் ‘உண்மையாகத்தான் சொல்கிறேன். அதுவாகவே உருவானதுதான். யாரும் இதைச் செய்யவில்லை’ என்று அழுத்தமாகச் சொன்னார். இளம் விஞ்ஞானிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘ஐயா, நிச்சயமாக இது அதுவாகவே உருவாக முடியாது என்பது எனக்கும் தெரியும். ஏன், உங்களுக்கும் தெரியும். பின் எதற்கு மறைக்கிறீர்கள்’ என்றார் விஞ்ஞானி.
அப்போது எடிசன் சொன்னார்: ‘இந்த அண்ட வெளியின் நுண்மாதிரியை எவரும் செய்யாமல் இது இங்கு இருப்பது சாத்தியமில்லை என்பது உண்மை என்றால், நாம் பார்க்கும் இந்த பிரபஞ்சம் மட்டும் எவரும் உண்டாக்காமல் அதுவாகவே எப்படி உருவாக முடியும்?’
இளம் விஞ்ஞானிக்கு அப்போதுதான் ஏதோ புரியத் தொடங்கியது. எடிசன் இன்னும் தொடர்ந்தார்: ‘படைப்புகள் இருக்கின்றனவென்றால் படைத்தவர் இருப்பது அவசியமல்லாவா? பிரபஞ்சம் மட்டும் எப்படி தானாகவே உருவாக முடியும்? அதை உண்டாக்க எவரும் தேவை என்பதை ஓரம் கட்டிவிட முடியுமா? படைப்பு உண்டெனில் படைத்தவரும் உண்டு அல்லவா!’.