தோளில் உனைச் சுமந்து தொலை தூரம் போவேன் அம்மா!
கள்ளக்குறிச்சி
மாவட்டம் திருக்கோவிலூர் பக்கத்திலிருந்து
மஞ்சள்
அறுவடைக்காக 15 பேர் கொண்ட ஒரு கூலித் தொழிலாளர் குழு
ஈரோடு
மாவட்டம் ஊஞ்சலூர் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தது.
கொரோனா
ஊரடங்கினால் வேலையுமில்லை, வருமானமுமில்லை.
சொந்த
ஊருக்கே திரும்பிவிடலாம் என்று முடிவெடுத்து
கள்ளக்குறிச்சியை
நோக்கி அவர்களின் கால்கள் நடக்கத் தொடங்கின.
அதில்
இன்னும் நெகிழ்ச்சியூட்டும் காரியம் எதுவென்றால்
பதினெட்டு
வயது நிரம்பிய ஓர் இளைஞன்
பத்து
மாதம் சுமந்து தன்னைப் பெற்றெடுத்த
தன்னுடைய
மாற்றுத் திறனாளி தாயாரை
தனது
தோள்களில் சுமந்தபடியே
ஏறக்குறைய
230 கிலோ மீட்டர் தூரம் நடந்து
தனது
சொந்த ஊரை அடைந்திருக்கிறான்.
கருவறையில்
கருவாக என்னைச் சுமந்தவள்
கண்களில்
கண்ணீரை என்னால் சுமக்காமலிருக்க
கைகளில்
வைத்து தாங்கிடுவேன் என்று செயல்பட்ட
இந்த
வாலிபன் நமக்கெல்லாம் வாழ்க்கைப் பாடமே.
“பெற்றவளைப் பேணிக் காப்பதே பெரும் பேறு என்று
தன்னைச் சுமந்தவளைத் தான் சுமந்து
தரணியில் தாய் பிள்ளை உறவை உயிர்ப்பித்த
தங்க மகன் இவன் ஒரு தனிச்சிறப்பான ஓவியமே!”