சொக்கத் தங்கமாக ஒரு ரொட்டிக் கடைகாரர்
பொது
முடக்கத்தில் இருக்கும் இந்நேரத்தில்
அத்தியாவசியப்
பொருட்கள் எல்லாம்
அநியாய
விலைக்கு ஆங்காங்கே விற்கப்படுகின்ற
அவலத்தை
நாம் அறிகிறோம்.
அதிசயங்களாய்
சில கடைகளும்
அத்தியாவசியத்
தேவைகளைக் குறைந்த விலையில்
அற்புதமாய்
நிறைவு செய்கின்றன.
கோவை
மாநகரில் ரெத்தினபுரி என்ற இடத்தில்
நெல்லை
முத்து விலாஸ் என்ற ஒரு ஸ்வீட்ஸ் கடை.
‘ஆளில்லாத
ரொட்டி கடை’ என்று
அதற்கு
இப்போது பெயர் ஆயிற்று.
ஒரு
பாக்கெட் பிரெட்டின் விலை ரூபாய் 30.
ஆள்
எவரும் கடையில் இருப்பதில்லை.
ஆனால்
பிரெட் பாக்கெட்டுகள் அடுக்கியிருக்கும்.
தேவைப்படும்
பிரெட் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு
தகுந்த
பணத்தை கல்லா பெட்டியில் போட்டுவிட்டு போகலாம்.
கல்லா
பெட்டியில் காசு போடப்படாமலும் போகலாம்.
கல்லாவில்
இருக்கும் காசு காணாமலும் போகலாம்.
கல்லாவே
கூட களவாடவும் படலாம்.
ஆனால்
கவலைப்படுவதில்லை கடைகாரர்.
கனிவும்
கருணையும் இக்கடைகாரர் கற்றுத் தரும்
கருத்துள்ள
பாடங்கள் அன்றோ!
“பெறுகின்றவரின் முகம் கொடுப்பவருக்குத் தெரியாது
கொடுப்பவரின் முகம் பெறுகிறவருக்குத் தெரியாது.
முடிந்ததைத் கொடு தேவையானதை எடு என்று
முற்போக்குச் சிந்தனையை முழு வீச்சோடு வாழும்
ரொட்டிக் கடைகாரர் மங்காத ஓவியம் அன்றோ!”