சமயம் கடந்தும் சமாதி வரை சுமந்து போன இஸ்லாமிய சொந்தங்கள்
குஜராத் மாநிலம் பாவ்நகர் என்னுமிடத்தில்
கொரோனா ஊரடங்கு சமயத்தில்
70 வயது மூதாட்டி ரஞ்சன் பத்ரேஷ்வரா இறந்து போனார்.
இவர் ஓர் இந்து.
இவருக்கு இரண்டு மகன்கள்.
இறந்த பெண்மணியின் இறுதி சடங்கிற்கு
தூர இருந்த உறவுகளால் வர முடியவில்லை.
அருகில் இருந்த வீட்டார் அனைவரும் முகமதியர்கள்.
10 முகமதியப் பெண்கள் இறந்த பெண்ணின் உடலுக்கு
கடைசி நீராட்ட பாசத்தோடு முன்வந்தனர்.
10 முகமதிய ஆண்கள் மயானத்திற்கு உடலை சுமந்து செல்ல
தோள் கொடுத்து தோழமையைக் காட்டினர்.
இப்படியாக இந்துப் பெண்மணி ஒருவருக்கு
இந்து சமய முறைப்படியே இறுதி சடங்கு செய்து கொடுக்க
முஸ்லீம் சமயத்து உறவுகள்
முன்வந்தது முக்கியத்துவம் பெறுகிறது.
முன் மாதிரிப் பாடமாய் இருந்து
சமய நல்லிணக்கத்தை நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
பக்கத்துக்கு வீட்டைப் பகை வீடாய் பார்க்கும் உலகில்
மாற்று மதத்தினரை மனித நேயத்துடன் பார்க்காத உலகில்
இந்துப் பெண்ணின் இறுதிச் சடங்கை
இந்து சமய முறைப்படியே செய்திட உதவிய
இந்த இஸ்லாமிய உள்ளங்கள் உன்னத ஓவியங்கள் தானே!