Tuesday, 14 July 2020

கொரோனா ஓவியங்கள் - 3




தாயெனும் சூரியனைத் தேடிப்போன சந்திரன் 





சந்திர மோகன் -

இவர் குஜராத்திலுள்ள அஹமதாபாத்தில் 

பொறியாளராக பணி செய்கிறார்

உடல் நலம் பாதிக்கப்பட்ட 

தன்னுடைய தாயைக் காண இவர் செல்ல வேண்டும்

ஆனால் கொரோனாவால்  ஊரடங்கு போடப்பட்டுள்ளது 

தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் இவருடைய சொந்த ஊர்.

தனது இரு சக்கர வாகனத்தில் பயணத்தைத் தொடங்கினார்

வழியில் உணவகங்கள் ஏதும் இல்லை.

வெறும் பிஸ்கட் மற்றும் தண்ணீர் தான் வழியில் இவர் சாப்பாடு.

இரவு பகல் பார்க்கவில்லை.

கண் உறக்கம் தேடவில்லை.

களைப்பு கவ்விடவில்லை.

வெயிலும் பனியும் தடுக்கவில்லை.

சுமார் 2,300 கிலோ மீட்டர் தொலைவு.

4 நாட்கள் பயணம் செய்து சொந்த ஊருக்கு வந்து சேர்ந்துள்ளார்

தாயை 'குடியிருந்த கோவில்' என்கிறோம்

தாயென்னும் கோவிலைக் காக்க மறந்திட்ட  

பாவியாய்  நாம் ஆகாமல் இருக்க 

தாயைத் தேடி ஓடிய  இந்த சேய் நமக்கு பாடமாகட்டும்




தாயை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு  

தன்னலத்தோடு வாழும் தனயன்கள் நடுவே 

தாயை பார்க்க தடைகளைத் தகர்த்து வந்த 

தனயன் சந்திர மோகன் தன்னிகரில்லாத ஓவியம் அல்லவா !