Wednesday, 1 July 2020

தேசிய மருத்துவர் தினம்

 தேசிய மருத்துவர் தினம் - ஜீலை 1




கொரோனாவின் கொடூரம் கண்டு

கொல நடுங்கி நாங்க நிக்க

கொஞ்சமும் அஞ்சாத நீங்க

கொஞ்சலாய் வைத்தியம் செய்றீங்க!


உணவெல்லாம் மறந்து விட்டு

உறக்கத்தையும் ஒதுக்கி விட்டு

உயிரையும் பணயம் வச்சு

உலகத்த காப்பாத்த உழைக்கிறீங்க!


மண்ணுக்கு வந்த நாள் முதல்

மண்ணவிட்டுப் போகும் வரை

மனிதர்களுக்கு உதவும் பணி

மருத்துவர்களே உங்கள் பணி!


மருத்துவர்களின் மறக் குணம்

மரணத்தோடு போராடும்

மருத்துவர்கள் இல்லா உலகம்

மயானத்தின் மடியில் விழும்!


மருத்துவர்களே! மனித உயிர் காப்பவர்களே!

மலையளவு நன்றியும் மனம் நிறைந்த வாழ்த்தும்

மறக்காமல் மறைக்காமல் மனிதனாய் சொல்கிறேன்:

மருத்துவர்களே நீவிர் வாழ்க பல்லாண்டு!


தேசிய மருத்துவர் தின வாழ்த்துகள்!!!