Friday, 4 September 2020

ஆசிரியர் தின வாழ்த்து

 ஆசிரியர்களே யார் நீங்கள்? 



ஏற்றிவிடும் ஏணிகள் நீங்கள்!

கரைசேர்க்கும் தோணிகள் நீங்கள்!

ஒளியூட்டும் விளக்குகள் நீங்கள்!

உயிரூட்டும் உயிர் மூச்சு நீங்கள்!


உலகிற்கு உப்பு நீங்கள்!

குன்றின்மேல் இருக்கும் தீபம் நீங்கள்!

மாணவர்கள் விரும்பும் மாதிரிகள் நீங்கள்!

அறியாமை நீக்கும் ஆதவன் நீங்கள்!


அல்லவை களையும் அதிசயம் நீங்கள்!

மண்ணைப் பொன்னாக்கும் மாமனிதர்கள் நீங்கள்!

கல்லைச் செதுக்கும் சிற்பிகள் நீங்கள்!

உலகின் எதிர்காலத்தை எழுதும் எழுதுகோல் நீங்கள்!


ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!!!


செபமும் ஆசீரும்,

அருள்பணி. சு.மரியசூசை.